தீபாவளி இனாம் கேட்ட நாமக்கல் தீயணைப்பு வீரர் பணியிடை நீக்கம்!

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனியார் ஆலய அதிபரிடம் தீபாவளி இனாம் கேட்டதாக அவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தீயணைப்பு வீரர் திருமுகம்
தீயணைப்பு வீரர் திருமுகம்

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனியார் ஆலய அதிபரிடம் தீபாவளி இனாம் கேட்டதாக அவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் நல்வினை செல்வன். இவர் தனியார் சாக்குப் பை ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நாமக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் திருமுகம் அவரிடம் கைப்பேசி வழியாக தீபாவளி இனாம் கேட்டுள்ளார். 

சம்பந்தப்பட்ட நல்வினை செல்வன் அவரை கண்டித்ததுடன், இனாம் கேட்ட ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கே.செந்தில் குமார் வீரர் திருமுகத்திடம் விசாரணை மேற்கொண்டு, அதன் பிறகு திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

நைனாமலை பெருமாள் கோயில் பாதுகாப்புப் பணியிலிருந்த போது தீயணைப்பு வீரர் திருமுகம் அவரிடம் இனாம் கேட்டு உரையாடலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com