தீபாவளி பரிசாக மக்களுக்கு ரயில்வே அறிவித்துள்ள பரிசு என்ன தெரியுமா?

தீபாவளி பரிசாக மக்களுக்கு ரயில்வே அறிவித்துள்ள பரிசு என்ன தெரியுமா?

இந்திய ரயில்வே நிர்வாகம் தீபாவளி பரிசாக மக்களுக்கு ரயில் நிலையங்களில் நடைபாதை (பிளாட்பார்ம்) டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகையொட்டி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரைக்கு பதிலாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஆனால், இந்திய ரயில்வே நிர்வாகம் தீபாவளி பரிசாக மக்களுக்கு ரயில் நிலையங்களில் நடைபாதை (பிளாட்பார்ம்) டிக்கெட் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது.

தற்போது பண்டிகை காலங்கள் என்பதால் ரயில் நிலையங்களில் இயல்பாகவே கூட்டம் அலைமோதும். இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் விலையை இரு மடங்காக உயர்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி, ரயில் நிலையங்களில் ரூ.10 ஆக இருந்த நடைபாதை டிக்கெட் விலை தற்போது ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதாவது சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் விலை ரூ.10 இல் இருந்து ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வானது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையின் போது பிளாட்பார்மில் அதிகயளவிலான கூட்டத்தை குறைக்கும் வகையில் நடைபாதை டிக்கெட் விலையை ரூ.10 இல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கூட்ட நெரிசலைத் தவிர்க்கத்தான் இந்த பிளாட்பார்ம் டிக்கெட் உயர்வு என கூறினாலும் மக்களுக்கு இதுமிகப் பெரும் சுமையாகவே இருக்கிறது என்பதுதான் ரயில் பயணிகளின் ஆதங்கமாக உள்ளது. 

எனவே, உறவினர், நண்பர்களை ரயில் ஏற்றிவிட ரயில் நிலையம் செல்பவர்கள் நடைபாதை டிக்கெட் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் நடைபாதை டிக்கெட் இல்லாதற்காக செலுத்த வேண்டிய அபராத கட்டணம் ஷாக் அடிக்கும் வகையில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com