பழனிசாமி தரப்பு மீது நடவடிக்கை: பேரவையில் துரைமுருகன் கோரிக்கை

சட்டப்பேரவையில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சட்டப்பேரவையில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மீது பதில் சொல்ல முடியாததால், பழனிசாமி தரப்பினர், பேரவையில் இதுபோன்று நடந்து கொள்கிறார்கள். விசாரணை அறிக்கைகளால் பழனிசாமி அணியினர் அச்சம் அடைந்துள்ளனர் என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார்.

மேலும், விசாரணை அறிக்கை மூலம் ஜெயலலிதாவுக்கு செய்த அட்டூழியங்கள் வெளியே வந்து விடும் என்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் மாண்பை குலைக்கும் வகையில் பேரவையில் இன்று பழனிசாமி தரப்பினர் நடந்து கொண்டதற்கு, அவைத் தலைவரும் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கலாகின்றன. 2 அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும் நிலையில், இன்று பழனிசாமி தரப்பினர் அவையில் அமளியில் ஈடுபட்டு, அவைத் தலைவர்கள் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அவையிலிருந்து பழனிசாமி தரப்பினரை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அவைக்கு வெளியே, அவைத் தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com