ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யவிடாமல் தடுத்தார் சசிகலா: அறிக்கை

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய விடாமல் சசிகலா தடுத்தார் என்று குற்றம்சாட்டியுள்ளது.
சசிகலா(கோப்புப்படம்)
சசிகலா(கோப்புப்படம்)

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வெளியான மருத்துவ அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததாக சுட்டிக்காட்டியிருக்கும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய விடாமல் சசிகலா தடுத்தார் என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில் பல்வேறு முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் சசிகலா, மருத்துவர் கே.எஸ். சிவக்குமார், அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நால்வர் மீது விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா - சசிகலா இடையே சுமூக உறவு இல்லாததால், தனது சுயலாபத்துக்காக மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை கிடைக்க விடாமல் சசிகலா தடுத்ததாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே, ஆஞ்சியோ செய்ய பரிந்துரை செய்தும், ஜெயலலிதா இறுதி மூச்சு வரை அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவேயில்லை. 

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா உள்ளிட்ட நால்வர் குற்றம் செய்தவர்களாகக் கருதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை வெளியிட்ட பொய் அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்படும்.

அதில் ஒரு அறிக்கையை பொய் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை பொய் அறிக்கை என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com