
கோப்புப்படம்
சென்னை: வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மலையம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி, கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதையும் படிக்க: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை
இதில் காரில் பயணம் செய்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் ஆகியோர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...