
நீதிமன்ற தீர்ப்பை பேரவைத் தலைவர் மதிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. அரசியல் ரீதியாக எதிர்கொள்ள அஞ்சி எங்களை கொல்லைப்புறமாக திமுக தலைவர் எங்களை பழிவாங்குகிறார்.
ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்ற தீர்ப்பே உள்ள நிலையில் அதை சட்டப்பேரவைத் தலைவர் மதிக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டப்பேரவை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.
திமுகவின் ஆதரவுடன் பன்னீர் செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன. 62 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதய குமாரை தேந்தெடுத்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.