செங்கல்பட்டில் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறை சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டில் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறை சார்பில் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தேசிய சுகாதார திட்டக் குழுவின் பரிந்துரையின்  படி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ் இயங்கும் மகப்பேறு மருத்துவத் துறையின் சார்பாக கருப்பை வாய் புற்றுநோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 

விழிப்புணர்வு முகாம் செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் நான்கு சாலை சந்திப்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நாராயணசாமி விழிப்புணர்வு பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் செல்வம், மகப்பேறு மருத்துவத் துறையின் தலைவர் பே.டாக்டர் வெங்கடேஸ்வரி மற்றும் துறை சார்ந்த மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவர்கள் முன் களப் பணியாளர்கள் பேரணியில் கலந்து கொண்டு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்திய வண்ணம் விழிப்புணர்வு முழக்கங்களையும் முழக்கமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து ஊர்வலமாகச் சென்றனர். பேரணி மகப்பேறு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு துறைத் தலைவர் வெங்கடேஸ்வரி தலைமை தாங்கிப் பேசினார். விழிப்புணர்வு முகாமில் மருத்துவத் துறை தலைவர் நர்மதா, மருத்துவர் தேன்மொழி செவிலியர் கண்காணிப்பாளர் துளசி செல்வி உள்ளிட்டோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

13 முதல் 15வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும். பொதுமக்கள் வளர் இளம் பெண்கள் கர்ப்பிணிகள் குறிப்பாக 30 முதல் 45 வயது பெண்மணிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது .

இதன் தொடர்ச்சியாக மருத்துவமனையின் முன் களப் பணியாளர்களுக்கு சிறப்பு கருப்பை வாய் பரிசோதனை விடியோ செய்யப்பட்டது. இளங்கலை மற்றும் முதுகலைப் பட்ட மேற்படிப்பு மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்துறை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com