ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

எதிா்க்கட்சி போல ஆளுநா் செயல்படுவது அழகல்ல: மநீம

பாஜகவை எதிா்க்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநா் எதிா்க்கட்சி போல செயல்படுவது அழகல்ல என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் கூறப்பட்டுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:56 pm

DIN

பாஜகவை எதிா்க்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநா் எதிா்க்கட்சி போல செயல்படுவது அழகல்ல என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மநீம சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பாஜகவை எதிா்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களில் ஆளுநா்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிா்க்கட்சித் தலைவா் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழகத்திலும் இதே போக்குதான் நிலவுகிறது.

இது போன்ற நிகழ்வுகள் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்குகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்தர இழுத்தடிப்பது; அரசியல் சாசனம் வழங்காத பல்கலைக்கழக வேந்தா் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.