தமிழக மக்களை குழப்பம் வகையில் ஆளுநர் பேசி வருகிறார்: வைகோ பேட்டி

தமிழ்நாட்டு மக்களை குழப்புவதற்காகவே ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். அவர் அபாண்டமாகவும், அவதூறாகவும் பேசி வருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 
தமிழக மக்களை குழப்பம் வகையில் ஆளுநர் பேசி வருகிறார்: வைகோ பேட்டி


தமிழ்நாட்டு மக்களை குழப்புவதற்காகவே ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். அவர் அபாண்டமாகவும், அவதூறாகவும் பேசி வருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தியையொட்டி, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் மதுரை தெற்குத் தொகுதி மதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் புதூர் பூமிநாதன் உள்பட திரளான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், 46 ஆண்டுகளாக தொடர்ந்து நான் வருகை தந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு ஆண்டு கரோனா தொற்று காரணமாகவும், மூன்று ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்ததால் நான் வரவில்லை.

சமுதாயத்திற்கு அப்பாற்பட்டு என்னளவிற்கு எந்தவொரு அரசியல் தலைவர்களும் வந்தது கிடையாது.

தமிழ்நாட்டு மக்களை குழப்புவதற்காகவே ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். அவர் அபாண்டமாகவும், அவதூறாகவும் பேசுகிறார்.

பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே நாளில் அமைந்தது தேவரின் சிறப்பு.

தமிழக ஆளுநர் தேவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட தலித் மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துப் போக வேண்டும் என்று வைத்தியநாதன் முயற்சி செய்தபோது அதற்கு உறுதுணையாக இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். 

தேவர் திருமகனார் துண்டு பிரசுரம் அவர்களை விரட்டியெடுத்தது. ஒடுக்கப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வைத்தியநாத ஐயர் அழைத்துச் செல்வதற்கு பிரதான காரணம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தான்.

ஜாதி, மத வேறுபாட்டிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை இந்த இடத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.

தேவர் புகழ் வாழ்க அவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம் வாழ்க தேவர் என்று தெரிவித்துவிட்டு பசும்பொன் நோக்கி புறப்பட்டார் வைகோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com