நீரில் மூழ்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சில மெட்ரோ ரயில் நிலையங்கள் நீரில் மூழ்கும் சூழல் இருப்பதால், மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. 
நீரில் மூழ்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சில மெட்ரோ ரயில் நிலையங்கள் நீரில் மூழ்கும் சூழல் இருப்பதால், மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை தொடங்கியுள்ளது. 

பருவமழையையொட்டி சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. 

சென்னையில் நீரில் மூழ்கும் நிலையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தற்போது 2- ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களிலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் சில, வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, ஏஜி-டிஎம்எஸ், அரசினர் தோட்டம், சைதாப்பேட்டை, அண்ணாநகர் கிழக்கு, ஆயிரம் விளக்கு, தண்டையார்பேட்டை, தியாகராய கல்லூரி மெட்ரோ ரயில் நிலையங்களில் நீர் உட்புகுவதைத் தடுக்க ஒரு மீட்டர் உயரம் கொண்ட வெள்ளத் தடுப்பு கதவுகள் வைக்கப்படும் என்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிலைமை கண்காணிக்கப்படும் என்றும் கூறினார். 

கடந்த ஆண்டு பருவமழையின்போது மேற்குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் புகுந்ததால் இப்போது இந்த கதவுகள் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சுரங்கப்பாதையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள அரசினர் தோட்டம், சைதாப்பேட்டை மற்றும் ஏஜி-டிஎம்எஸ் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த பிரச்னைகளை எதிர்கொண்டதால் இந்த ஆண்டு எச்சரிக்கையாக இருப்பதாகவும் மேலும் சுரங்கப்பாதைகளிலும் தேங்கும் நீரை அகற்றவும் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

மெட்ரோ ரயில் நிலையங்களின் மற்ற பகுதிகளிலும் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அதனைக் கண்காணித்து  உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் தற்போது 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com