
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் புதன்கிழமை இரவு முல்லைப்பெரியாற்றில் விசர்ஜனம் செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை இந்து முன்னணி மற்றும் விநாயகர் விழா குழு என இரண்டு அணிகளாக கொண்டாட அனுமதி கோரினார்.
இதில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கிடையே இருதரப்பிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், இந்து முன்னணியினருக்கு மட்டும்தான் ஊர்வலத்திற்கு அனுமதி, மற்ற அணியினருக்கு இல்லை என்றனர்.
இதையும் படிக்க | தாமதமான விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் அவதி
இதன் எதிரொலியாக, விநாயகர் விழா குழுவினர் வடக்கு பகுதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் மண்டபத்தில் ஊர்வலத்திற்கு அனுமதிக்கோரி கருப்புக் கொடி ஏந்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
ஆனால், போலீசார் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரின் 18 சிலைகளை போலீசாரை கைப்பற்றி, புதன்கிழமை இரவோடு இரவாக காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் கரைத்தனர்.