மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 1,15,000 கன அடியாகக் குறைந்தது.
தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.
இதையும் படிக்க | சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் உயர்வு
புதன்கிழமை இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,45,000 கன அடியாக வந்துகொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை வினாடிக்கு 1,15,000 கன அடியாகக் குறைந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 1,15,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 92,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47டிஎம்சி ஆகவும் உள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழையளவு 19.00 மி.மீ