கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் திறக்கப்படும்: அமைச்சா் எ.வ. வேலு

கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.
கீழடியில் நடைபெற்று வரும் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் எ.வ.வேலு. உடன், அமைச்சா்கள் கேஆா்.பெரியகருப்பன், பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அகழ் வைப்பகக் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு, தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது: கீழடியில் ரூ. 12. 21 கோடியில் உலகத் தரத்தில் கட்டப்பட்டு வரும் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட 10, 210 -க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுக்கு பின்பு கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என்றாா்.

இதில், மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா், முதன்மை தலைமைப் பொறியாளா் ஆா்.விஸ்வநாதன், மண்டல தலைமைப் பொறியாளா் ரகுநாதன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளா் (பாரம்பரிய கட்டடக் கோட்டம்) எஸ்.மணிகண்டன், தொல்லியியல் துறை இணை இயக்குநா் ம.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com