ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

சென்னையில் பிளாஸ்டிக் பையில் கொலை செய்யப்பட்ட உடல்: யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? 

சென்னை விருகம்பாக்கம்-கோயம்பேடு இணைப்பு சாலைக்கு அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடந்ததை கண்டு தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:13 am

DIN


சென்னை விருகம்பாக்கம்-கோயம்பேடு இணைப்பு சாலைக்கு அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடந்ததை கண்டு தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை விருகம்பாக்கம்-கோயம்பேடு இணைப்பு சாலைக்கு அருகே உள்ள காளியம்மன் தெரு பகுதியில் பெரிய கழிவு நீர் கால்வாய் ஓடுகிறது. இதனை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சனிக்கிழமை காலை 7 மணியளவில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கால்வாயையொட்டிய மெயின் ரோட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Story image

பாஸ்கரன்

இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். முதியவரான இவரை மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்து பின்னர் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி கால்வாய் பகுதியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவரது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருக்கிறது. கொலையான முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து  அறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பதும், 67 வயது மதிக்கத்தக்க அவரை கொலையாளிகள் கடத்திச் சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கொலையாளிகள் வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு உடலை விருகம்பாக்கம் பகுதியில் வீசி சென்று உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

முதியவர் பாஸ்கரன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கடத்தி கொடூரமாக கொலை செய்ய காரணம் என்ன? என்பது பற்றி வளசரவாக்கம் காவல் உதவி அணையர் கௌதமன், கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ்பாபு, விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் ஆகியோர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 

Story image

பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார்.

பாஸ்கரனுக்கு விரோதிகள் யார்-யார்? என்பது பற்றி அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

விருகம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.