புத்தகப் பை இல்லாத பள்ளி நாள்: மாநில அரசின் மகிழ்ச்சியான திட்டம்!

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில், மத்தியப் பிரதேச அரசு புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த உள்ளது. 
புத்தகப் பை இல்லாத பள்ளி நாள்: மாநில அரசின் மகிழ்ச்சியான திட்டம்!

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில், மத்தியப் பிரதேச அரசு புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த உள்ளது. 

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் புத்தகப் சுமையைக் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. புதிய திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.30 லட்சம் மாணவர்கள் வாரத்திற்கு ஒருமுறை புத்தகப் பைகளைப் பள்ளிக்குக் கொண்டு செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வகுப்பிற்கு ஏற்றாற்போல் புத்தகப் பையின் எடைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆகஸ்ட் 29 அன்று மத்திய பள்ளிக் கல்வித் துறையின் துணைச் செயலர் பிரமோத் சிங் வெளியிட்ட சுற்றக்கையில், 

அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் அடுத்த மூன்று மாதங்களில் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளின் படி புத்தகப் பைகளின் எடை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், புதிய வழிகாட்டுதல்களின்படி, கணினி, மாடல் சயின்ஸ், பொது அறிவு, விளையாட்டு, உடற்கல்வி, சுகாதாரம் மற்றும் கலை போன்ற பாடங்களை புத்தகங்கள் இல்லாமல் கற்பிக்கப் பள்ளிகளுக்கு வழிகாட்டியுள்ளது. 

மேலும், மாநில அரசு மற்றும் என்சிஇஆர்டி நிர்ணயித்த புத்தகங்களைத் தவிர வேறு எந்தப் புத்தகங்களையும் பள்ளிக்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. 

புதிய திட்டத்தின்படி, 1 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்கள் 1.6 கிலோ முதல் 2.2 கிலோ எடையுள்ள பள்ளிப் பைகளையும், 3, 4 மற்றும் 5ஆம் வகுப்புகள் 1.7 கிலோவிலிருந்து 2.5 கிலோ வரையிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.

6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்கள் 2 முதல் 3 கிலோ எடையுள்ள பள்ளிப் பைகளையும், 8ஆம் வகுப்பு 2.5 கிலோவிலிருந்து 4 கிலோ வரையிலும், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு 2.5 கிலோவிலிருந்து 4.5 கிலோ வரையிலும் புத்தகப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்றவாறு புத்தகப் பைகளின் எடையைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com