தக்காளி விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வந்த தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ. 45 ஆக விற்பனையாகி வருகிறது.
தக்காளி விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!


சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வந்த தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ. 45 ஆக விற்பனையாகி வருகிறது. இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகம் மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளது. 

இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து  கோயம்பேடு சந்தைக்கு அண்டை மாநிலங்கள் கேரளம், ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்து தக்காளி வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 90 லாரிகளில் வரும் தக்காளி தற்போது 45 இருந்து 40 வாகனங்களில் மட்டுமே வருவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. மேலும், இன்று திங்கள்கிழமை சுபமுகூர்த்த நாள் என்பதாலும் தக்காளி தட்டுப்பாடும் நிலவி வருகிறது. 

இதையும் படிக்க | சென்னையில் டீசல் தட்டுப்பாடு?
 
இதனால் ரூ.20-க்கு விற்பனையான தக்காளி இன்று திங்கள்கிழமை கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்டை மாநிலங்களில் தொடர் மழை நீடித்து வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.20 ஆக விற்பனையான தக்காளி இரண்டு நாள்களில் கிடுகிடுவென உயர்ந்து ரூ.45 ஆக விற்பனை செய்யப்பட்டுவது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com