சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்யணம் செய்து அறிவித்து வருகின்றன.
சென்னையில் 107 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகின்றன. திங்கள்கிழமை(செப்.5) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.65 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து
இந்நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலான நிலையங்களில் 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
'டீசல் இல்லை' என்ற தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவு

புதிய சமையல் எரிவாயு சிலிண்டா் புதுச்சேரியில் அறிமுகம்

குழாய் தண்ணீரில் குளித்து காவிரி, கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

அதிமுகவில் புதிய பதவிகளை ஏற்கமாட்டோம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



