எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், சென்னை தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

மததிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற  இந்த தன்னாட்சி நிறுவனம் சிஇஓ வேர்ல்டு மேகஸின் (CEO WORLD MAGAZINE) நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் மொத்தம் 100 நிறுவனங்களில் 14 வது இடம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு பி.எஸ்சி (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பும், ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production) பட்டயப் படிப்பும், மேலும் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் (Craftmanship Course in Food Production & Patisserie) பற்றிய படிப்பும் படிக்கலாம்.

படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம்,
கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் நூறு சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றிடவும் தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது. இப்படிப்புக்கான கட்டண தொகையை தாட்கோ கல்விகடனாக வழங்கும்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ25,000 முதல் ரூ,35,000 வரை
பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ,50,000 முதல் ரூ.70,000வரை ஊதியமாக பெறலாம். இப்படிப்பில் விண்ணப்பம் செய்ய www.tahdco.com என்ற இணையதள முகவரியில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com