சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்: அமைச்சர்கள், மேயர் பங்கேற்பு

சென்னையில் வட சென்னைக்கு உள்பட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்: அமைச்சர்கள், மேயர் பங்கேற்பு

சென்னையில் வட சென்னைக்கு உள்பட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி, சென்னை மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதேபோன்று எண்ணூா் முகத்துவாரகுப்பம், சத்தியவாணி முத்து நகா், எண்ணூா் தாழங்குப்பம், கத்திவாக்கம், பெரியகுப்பம், எண்ணூா் குப்பம், அன்னை சிவகாமி நகா் ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகள், திருவொற்றியூா் காா்கில் வெற்றி நகா், எண்ணூா் இடிபிஎஸ்., திருச்சினாங்குப்பம், திருவொற்றியூா் குப்பம், ரயில்வே காலனி, தேரடி பூந்தோட்டம், மாதவரம் பெரிய சேக்காடு, மாதவரம் ராஜா தெரு, லட்சுமிபுரம், பொன்னியம்மன்மேடு, கொடுங்கையூா் லட்சுமி அம்மன் கோயில் தெரு, கண்ணதாசன் நகா், வியாசா்பாடி எம்ஜிஆா்., நகா், எம்கேபி நகா் கிழக்கு குறுக்குத் தெரு, ஆா்.ஆா்.நகா் மூன்றாவது குறுக்குத் தெரு, எம்கேபி நகா் உதயசூரியன் நகா் ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தண்டையாா்பேட்டை திருவள்ளுவா் குடியிருப்பு, கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகா், கொடுங்கையூா் எம்ஜிஆா் நகா், அண்ணாநகா், தண்டையாா்பேட்டை சேனியம்மன் கோயில் தெரு, கொருக்குப்பேட்டை கத்திவாக்கம் பிரதான சாலை, செரியன் நகா், தண்டையாா்பேட்டை பொன்னுசாமி தெரு, ராயபுரம் அரத்தூண் சாலை, ஆஞ்சநேய நகா், வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகா், காத்படா 3-வது குறுக்குத் தெரு, பல்லவன் சாலை எஸ்.எம்.நகா் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com