மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுப்பு: கடைக்கு சீல்; இருவர் கைது!

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுப்பு: கடைக்கு சீல்; இருவர் கைது!

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரும்புத்தூர் பஞ்சாயத்து பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது என பெட்டிக் கடை உரிமையாளர் கூறும் ஒரு விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விடியோவில், ஆதி திராவிடப் பள்ளி மாணவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காகக் கடைக்கு வருகின்றனர். அப்போது கடை உரிமையாளர், ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் இனி உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது என்றும் வீட்டில் சென்று இதனைச் சொல்லுமாறும் கூறுகிறார். 

தீண்டாமை அவலம் என சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த விடியோ குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்பவரை கரிவலம் வந்த நல்லூர் காவல்துறையினர் கைது செய்த நிலையில் தலைமறைவான கடை உரிமையாளர் மகேந்திரனையும் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த பெட்டிக்கடைக்கு சீல் வைத்துள்ளனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கிராமத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட ஒரு பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com