உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு கட்டையில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சிறுமி உள்பட 3 பேர் பலியாகினர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏஜாஸ் (வயது 28). இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தையையும், மனைவியையும் பார்ப்பதற்காக சேலம் சென்றுள்ளார். பின்னர் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சமீம், அம்ரின், சுபேதா அகிய மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரை ஓட்டி வந்த ஏஜாஸ் மற்றும் நசீம் அகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி
மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.