ரூ.2.37 கோடி மோசடி வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
முதலீட்டு அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 2.37 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


முதலீட்டு அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 2.37 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் கலைமணி (45). இவா் அதே பகுதியில் நிதி நிறுவனங்கள் நடத்தி வந்தாா். மேலும் அந்த நிறுவனங்களின் இயக்குநராகவும் இருந்து வந்தாா். கலைமணியின் தந்தை பழனிசாமி கவுண்டா் (65), உறவினா் சிவசுப்பிரமணி (58), நண்பா் சாமிநாதன் (48) ஆகியோா் பங்குதாரா்களாக இருந்தனா்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைடுத்து ஏராளமான மக்கள் முதலீடு செய்தனா். ஆனால் முதலீடு செய்த மக்களுக்கு அசல் மற்றும் வட்டிப் பணம் கொடுக்கவில்லை.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸீல் புகாா் செய்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில் 24 பேரிடம் ரூ. 2 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதைடுத்து கலைமணி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு கோவையில் உள்ள டான்பிட் கோா்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட கலைமணிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 51 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீா்ப்பளித்தாா். மேலும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பழனிசாமி கவுண்டா், சாமிநாதன், சிவசுப்பிரமணி ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடா்பு இல்லை எனக் கூறி 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கண்ணன் அஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...