சத்தியமங்கலத்தில் பிடிபட்ட கருப்பன் ஒற்றை யானை

கரும்பு தோட்டத்துக்கு வந்த கருப்பன் ஒற்றை யானையை மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
சத்தியமங்கலத்தில் பிடிபட்ட கருப்பன் ஒற்றை யானை
Published on
Updated on
1 min read

கரும்பு தோட்டத்துக்கு வந்த கருப்பன் ஒற்றை யானையை மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் கருப்பன் ஒற்றை யானை தினந்தோறும் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியுடன் இரவு நேர காவலுக்கு சென்ற இரு விவசாயிகளை தாக்கி கொன்றது. 

இதனால் அச்சமடைந்த தாளவாடி மக்கள் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கருப்பன் யானையை பிடிக்க கடந்த ஜனவரி மாதம் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஆபரேசன் கருப்பு என்ற பெயரில் அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 

இந்த முறை ஆபரேசன் கருப்பு என்ற பெயரை எஸ்டிஆர் ஜெடிஎம்1 என மாற்றி நேற்றிரவு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட மாரியப்பன், சின்னத்தம்பி கும்கி யானைகள் மூலம் யானை வரும் வழித்தடத்தில் காத்திருந்தனர். 

அப்போது இரவு நேரத்தில் மகாராஜன்புரம் கரும்பு தோட்டத்துக்கு வந்த யானையை மருத்துவகுழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். மயங்கிய  நிலையில் இருந்த யானையை ஜேசிபி இயந்திரம் மற்றும் கும்கி யானைகளை கொண்டு அதன் கால்களை கட்டி கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் கும்கி யானை பயன்படுத்தி லாரியில் ஏற்றும் பணியை நடத்தினர்

யானை முதுமலை அல்லது பொள்ளாச்சி டாப் சிலிப்புக்கு கொண்டு செல்லப்படுகிறா அல்லது வேறு பகுதிக்கு விடப்படுகிறா என்பதை வனத்துறையினர் ரசகியமாக வைத்துள்ளனர். 

கடந்த முறை தருமபுரியில் பிடிபட்ட யானை தெங்குமரஹாவில் விட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் யானை விடுவிக்கும் இடம் ரகசியம் காக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com