விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூட செல்லவில்லை

எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவை நாகரிகம் கருதி முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூடச் செல்லாமல் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தார் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:23 am

DIN

எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவை நாகரிகம் கருதி முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூடச் செல்லாமல் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தார் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பதிலுரை அளிக்கத் தொடங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்யும் கோரிக்கை மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.

மேலும் சிறப்பாக நடக்கும் சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு இடையே முதல்வரின் பதிலுரையை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். 

எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவை நாகரிகம் கருதி முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூட செல்லாமல் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தார். ஆனால் அதிமுக அவையை விட்டு சென்றது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.