
சிதம்பரம் நீதிமன்ற வாயிலில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள சிதம்பரம் நீதிமன்ற வாயிலில் அகில இந்திய வழக்குரைஞர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆழ்வார் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் கௌதமன், வைத்தியலிங்கம், செல்வகுமார், பெர்னாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞர்கள் தயாநிதி, செந்தில், மணிவண்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.
இதில் வழக்குரைஞர்கள் ராஜவேல், பாலகுரு, சங்கர், அருண்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழியை நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.