எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உள்பட கரூரில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2023, 5:08 am

DIN

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உள்பட கரூரில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

இந்நிலையில், கரூர் செங்குந்தபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் கிரானைட் நிறுவன உரிமையாளரின் வீடு  மற்றும் ஆதரவாளர்கள் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் வீடு மற்றும் அலுவலகம் பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து கரூரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.