பாஜக பாதயாத்திரையைக் கண்டு திமுக அஞ்சுகிறது: கே.பி.ராமலிங்கம்

திருப்பூர், கரூர் ,போத்தனூர், சேலம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள், உலகத்தரம் வாய்ந்தவையாக நவீன முறையில் புதுப்பிக்கப்பட உள்ளது.
பாஜக பாதயாத்திரையைக் கண்டு திமுக அஞ்சுகிறது: கே.பி.ராமலிங்கம்

பென்னாகரம்: தமிழகத்தில் நடைபெற்று வரும் பாஜகவின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை கண்டு திமுக அரசு அஞ்சுவதாக பாஜக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் பென்னாகரத்தில் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில் பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக வந்த  கே.பி.ராமலிங்கம் பென்னாகரம் பயணியர் மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு 76 ஆவது சுதந்திர தின விழாவின் போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள 508 ரயில் நிலையங்கள் நவீன மையமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார் அதன் தொடக்கமாக வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி 508 ரயில் நிலையங்களை நவீன மையமாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் தொடக்க விழா தில்லியில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன. அதில் சேலம் மண்டலத்தைப் பொறுத்தவரை திருப்பூர், கரூர் ,போத்தனூர், சேலம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள், உலகத்தரம் வாய்ந்தவையாக நவீன முறையில் புதுப்பிக்கப்பட உள்ளது.

இதுவரையில் இந்தியாவில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை புதுப்பித்த வரலாறு கிடையாது. முதல்முறையாக வரலாற்று சிறப்புமிக்க செயலை உலகத் தரத்தில் ரயில் நிலையங்களை புதுப்பித்து, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவை உயர்த்துவதில் முன்னோடி பிரதமராக நரேந்திர மோடி திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ள என் மண், என் மக்கள் யாத்திரை வருகின்ற சேலம் ,தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக நாமக்கல், சேலம் மாவட்டங்களிலும் வருகின்ற ஆகஸ்ட் 25, 26, 27, 28 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ளதால் பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.

தமிழகத்தில் தியாகிகள் வாழ்ந்த இடங்களில் முழுவதும் மண் எடுத்துச் செல்ல பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்டத்தில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகளோடு பொதுமக்கள் முன்னிலையில் மண்ணை எடுத்து வந்து சொம்பு கலையத்தில் வைத்து டெல்லிக்கு அனுப்பி வைக்கும் விழா நடைபெற உள்ளது.

என் மக்கள்,என் மண் யாத்திரை தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் 8, 9, 11, 12 ஆகிய நாட்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ,11, 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் பாதயாத்திரைக்கு பொது மக்கள் கொடுக்கும் வரவேற்பைக் கண்டு திமுக உறுப்பினர்கள் அஞ்சு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாத யாத்திரைக்கு பொதுமக்கள் கொடுக்கின்ற வரவேற்பு, திமுக அரசின் மீது பல்வேறு புகார்கள், தேர்தல் நேரத்தின் போது அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என ஏராளமான மனுக்கள் எழுதி கொடுக்கின்றனர்.

அந்தப் போராட்டத்தில் வழக்கு தொடரப்பட்டு பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் ஆறு பேர் உடல்நிலை காரணமாக ஆஜராகாததால் மீண்டும் 18ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை கண்டு பாஜக என்றும் அஞ்சாது. சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் திகழ்ந்ததைப் போல தமிழகத்தில் தேசியத்தையும், ஆன்மிகத்தையும் முழு முயற்சியாக கொண்டுள்ள செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக நிர்வாகிகள் வழக்குகளை பற்றி கவலைப்படுவதில்லை.

பாஜகவின் பாதயாத்திரை நாடாளுமன்ற தேர்தலுக்கான அடித்தளம்.  தமிழகத்தில் நடைபெற்று வரும் பாஜகவின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை கண்டு திமுக அரசு அஞ்சு வருவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com