இந்தியா கூட்டணியை மோடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானதை பிரதமர் நரேந்திர மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ்
இந்தியா கூட்டணியை மோடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்


புதுதில்லி: காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானதை பிரதமர் நரேந்திர மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி) என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதேபோன்று, பாஜகவும் தங்கள் ஆதரவு கட்சிகளோடு இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் அரசியல் களத்திற்கு கொண்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 

அதாவது, காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானதை பிரதமர் நரேந்திர மோடியால் பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிக்காமல் வெறுமனே போக்கு காட்டி வருவதையும், பிரிவினையைத் தூண்டும் அரசியலையும் மக்கள் அறவே வெறுக்கின்றனர்.

தற்போது தேவையானது, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பது மட்டுமல்லாது, வலுப்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com