கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி: நாளை சிறப்பு மெட்ரோ ரயில்

சென்னையில் மாரத்தானில் பங்கேற்போர் வசதிக்காக நாளை அதிகாலை 3.40 முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.  
சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

சென்னையில் மாரத்தானில் பங்கேற்போர் வசதிக்காக நாளை அதிகாலை 3.40 முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. 

நான்காவது சா்வதேச கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி 5 கி.மீ., 10 கி.மீ., 21.1 கி.மீ., 42.2 கி.மீ. ஆகிய 4 பிரிவுகளில் நடைபெறுகிறது.

அனைத்துப் பிரிவுகளும் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைகிறது. 

இந்த நிலையில் சென்னையில் மாரத்தானில் பங்கேற்போர் வசதிக்காக நாளை அதிகாலை 3.40 முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. மாரத்தானில் பங்கேற்போர் நாளை அதிகாலை 3.40 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கட்டணம் இன்றி பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியையொட்டி, சென்னை மெரீனாவில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com