மக்களாட்சியின் கறுப்பு நாள்; கொத்தடிமை இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்

தில்லி நிர்வாக திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

தில்லி நிர்வாக திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தில்லி நிா்வாக திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை காரசார விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, தில்லி நிா்வாக திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதாவுக்கு மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், குடியரசுத் தலைவரின் சட்ட ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

இந்நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

“தலைநகர் தில்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் தில்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள். எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை தில்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்.

இதையும் படிக்க | தில்லி நிா்வாக திருத்த மசோதா நிறைவேற்றம்: மாநிலங்களவை வாக்கெடுப்பில் ஆதரவு 131; எதிா்ப்பு 102

மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், தில்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. "நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com