ஆக. 11: தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு

தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆக. 11: தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு

தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 11-ஆம் தேதிமுதல் ஆக.15-ஆம் தேதி வரை சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறைக்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், மறுவழியில் திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 12-ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில்(06052) திருச்சி, மதுரை வழியாக சனிக்கிழமை காலை 4.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுவழியில் ஆகஸ்ட் 12 சனிக்கிழமை மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 4.10 மணிக்கு வந்துசேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இணையதளம் மற்றும் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com