
நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ளவர் சத்யராஜ். இவரது தாயார் நாதாம்பாள் காளிங்கராயர்(94). இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார்.
நாதாம்பாளுக்கு மகன் சத்யராஜ் மற்றும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். தாயாரின் மறைவுச் செய்தியறிந்து, ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் காளிங்கராயரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.