அவிநாசி அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய எம்.பி. ஆ.ராசா: வைரலாகும் விடியோ

அவிநாசி அருகே தெக்கலூரில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு, சிகிச்சைக்கு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் எம்.பி. ஆ.ராசா. இந்த விடியோ சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவிநாசி அருகே தெக்கலூரில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு, சிகிச்சைக்கு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் எம்.பி. ஆ.ராசா.
அவிநாசி அருகே தெக்கலூரில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு, சிகிச்சைக்கு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் எம்.பி. ஆ.ராசா.

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு, சிகிச்சைக்கு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் எம்.பி. ஆ.ராசா. இந்த விடியோ சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ரூ.5 கோடியே 56 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி வைத்தார். நிறைவாக அவிநாசி அருகே தெக்கலூரில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்து விட்டு, கோவை விமான நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு மயக்கம் அடைந்ந நிலையில் கிடந்ததை பார்த்த அவர், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி தனது காரிலேயே ஏற்றி கோவை   மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

மயக்கமுற்ற அந்த இளைஞரை உடனிருந்து சிறப்பு சிகிச்சை அளிக்க தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் என்பவரையும் அனுப்பி வைத்தார்.  

மேலும் அந்த இளைஞருக்கு வழங்கப்பட உள்ள சிகிச்சை முறை குறித்தும் மருத்துவமனைக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணை செய்தார். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com