இந்த ஆண்டுக்குள் வேளச்சேரி-பரங்கிமலை ரயில் பாதை விரிவாக்கப் பணி 

இந்த ஆண்டு இறுதிக்குள் வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும்
இந்த ஆண்டுக்குள் வேளச்சேரி-பரங்கிமலை ரயில் பாதை விரிவாக்கப் பணி 

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ஆண்டு இறுதிக்கள், காரைக்கால் - பேரளம், சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் பாதைகள் திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பறக்கும் ரயில் சேவை வேளச்சேரி முதல் பரங்கிமலை விரிவாக்கம் செய்யும் பணியும், சென்னை கடற்கரை முதல் சென்னை எழும்பூர் வரையிலான ரயில் பாதையில் கூடுதலாக 4வது ரயில் தடம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் வரை இந்திய ரயில்வேயின் 102 ரயில்வே மேம்பாலங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பே 40 மேம்பாலங்கள் சீரமைக்கப்பட்டுவீட்டன்.

சென்னை மண்டலத்தில் உள்ள 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவு பெற்றுவிடும். 

அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே பயண வேகம் மணிக்கு 110 கி.மீ. என்பது மணிக்கு 130 கிலோ மீட்டர் என அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடேயயான பறக்கும் ரயில் சேவையை ரூ.495 கோடியில் பரங்கிமலை வரை நீட்டிக்கும் பணிகள் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி நிலம் கையகப்படுத்தும் பணியால் தாமதமாகி, ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்த வழித்தடத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் முடிவடைந்து தயாராக உள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com