கந்தர்வகோட்டை அருகே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்: பள்ளி மாணவ,மாணவியர் அவதி

பதாகைகளை எடுத்தவர்களை கைது செய்யக் கோரியும், இப்பகுதியில் நிரந்தரமான கட்சி கொடி கம்பம் அமைத்து கொடி ஏற்ற வேண்டும்
கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் சாலை மறியல் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் சாலை மறியல் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.


கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விளம்பரப் பதாகையை எடுத்து சென்றவர்களை கைது செய்யக்கோரி, அந்தக் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ- மாணவியர் மிகவும் அவதிப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் வியாழக்கிழமை சாலை ஓரத்தில் வாழ்த்தி விளம்பரப் பதாகைகள் வைத்திருந்தனர். அதனை முகம் தெரியாத நபர்கள் எவரோ அகற்றி விட்டார்கள் என விடுதலை சிறுத்தை கட்சியினர் வெள்ளிக்கிழமை காலை மட்டங்கால் பேருந்து நிறுத்தம் முன்பாக பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் ஏராளமான பள்ளி வாகனமும், இருசக்கர வாகனங்களும், அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. 

இது குறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து மறியலைக் கைவிடச் செய்து போக்குவரத்தை சரி செய்தனர். 

மேலும் அக்கட்சியின் மாநில துணை செயலாளர் விடுதலை வேந்தன் கூறும் போது, பதாகைகளை எடுத்தவர்களை கைது செய்யக் கோரியும், இப்பகுதியில் நிரந்தரமான கட்சி கொடி கம்பம் அமைத்து கொடி ஏற்ற வேண்டும் எனவும், வரும் காலங்களில் வைக்கின்ற கட்சி பதாகைகளை எவரும் அகற்றக் கூடாது என கோரிக்கை வைத்தார். இதில், கட்சியினா் கலந்து கொண்டனா்.

மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com