தமிழ்நாடு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் சென்னை சென்டரல் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | விஜய் 68: யுவனுடன் களமிறங்கும் தமன்!
இதற்கிடையே கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தது வியாசர்பாடியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.