சேந்தனாங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருவாரூர் அருகே சேந்தனாங்குடி அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
சேந்தனாங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருவாரூர் அருகே சேந்தனாங்குடி அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

திருவாரூர் அருகே சேந்தனாங்குடி கிராமத்தில் ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் கோயிலின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள், கடந்த மூன்று நாள்களுக்கு முன் மகா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

நிகழ்வில், சேந்தனாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், குடமுழுக்கு சிறப்பாக நடக்கவும் சீரான மழை பெய்து, பயிர்கள் செழிப்பாக வளரவும் வேண்டி அங்குள்ள விநாயகர் கோயிலிலிருந்து ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்து வழிபாடு நடத்தினர். இதையடுத்து யாகசாலை பூஜைகள் தினசரி நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை முடிவடைந்து, மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.

இதையடுத்து சிவாசாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து, ஆலயத்தைச் சுற்றி வந்தனர். அப்போது பக்தர்கள், பொரி மற்றும் மலர்களைத் தூவி அவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர். தொடர்ந்து, ராஜ கோபுரம் மற்றும் படைவெட்டி மாரியம்மன் உள்ளிட்ட ஏனைய பரிவாரத் தெய்வங்களின் கோபுரங்களுக்கு கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் மந்திரங்களை முழங்க ஒரு சேர ராஜகோபுரம் மற்றும் படைவெட்டி மாரியம்மன் கோபுரம் ஆகியவற்றிற்கு கடத்தில் கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

மேலும் கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் ஆலயத்தை சுற்றியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கலசத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com