சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம்: எங்கே நேரலையில் காணலாம்?

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நாளை (ஆக.23) நிலவில் தரையிறங்கவுள்ளது. 
சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம்: எங்கே நேரலையில் காணலாம்?


நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நாளை (ஆக.23) நிலவில் தரையிறங்கவுள்ளது. 

இந்த வரலாற்று நிகழ்வை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் நேரலை செய்வதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தற்போது சந்திரயான் - 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட லேண்டா் கலன், நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது.

மேலும்,  சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் சாதனம் சந்திரயான் -3 லேண்டருடன் தொடர்புகொண்டுள்ளது. இதனால், ஆர்பிட்டர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டர் கலனை நிலவில் பத்திரமாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமடைந்துள்ளது. 

ரஷியா அனுப்பிய லூனா -25 விண்கலம் தோல்வியில் முடிந்த நிலையில், சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம் உலக நாடுகளிடையேயும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாறியுள்ள சந்திரயான் -3 லேண்டர் கலன் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நாளை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கவுள்ளது. 

இந்த நிகழ்வை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://isro.gov.in என்ற தளத்திலும், இஸ்ரோ யூடியூப் பக்கத்திலும், இஸ்ரோ முகப்புத்தகப் பக்கத்திலும் நேரலையில் காணலாம். மேலும், டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும் நேரலை ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேரலை செய்யப்படும் இஸ்ரோவின் யூடியூப் பக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com