

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க.. பஞ்சாங்கத்தின்படி செயல்படுமாறு காவலர்களுக்கு அறிவுறுத்திய டிஜிபி
காலை 7 மணியளவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 8 மணியளவில் டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பதிவுகளில், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையில், அயனாவரம், ஆலந்தூர், மதுரவாயல், பூவிருந்தவல்லி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
திருக்கழுகுன்றம், திருப்போரூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், மதுராந்தகம், திருத்தணி, அரக்கோணம், குன்றத்தூர், திருவள்ளூர், பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டை பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.