வாழப்பாடியில் மு.க. ஸ்டாலின் அறிவாலயம்: அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மு.க. ஸ்டாலின் அறிவாலயம் மற்றும் கருணாநிதி சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் மு.க. ஸ்டாலின் அறிவாலயம்: அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மு.க. ஸ்டாலின் அறிவாலயம் மற்றும் கருணாநிதி சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக தலைமையிடமாக மாறியுள்ள வாழப்பாடியில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம், மு.க.ஸ்டாலின் அறிவாலயம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என்.நேரு திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுவையில், 'தமிழகத்திலே முதன்முதலில் வாழப்பாடியில், மு. க. ஸ்டாலின் பெயரில் அறிவாலயம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு,  சாதித்துக்காட்டி உள்ளீர்கள். எதிர்வரும் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரில் அறிவாலம் அமைத்த கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகளுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

சேலம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்வீர்களா? என தொண்டர்களை பார்த்து அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.  வெற்றி பெறச் செய்வோம் என தொண்டர்கள் உரக்க முழக்கமிட்டனர்.

இந்த விழாவில், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி, சேலம் தொகுதி எம்பி பார்த்திபன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், சின்னதுரை, மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் வாழப்பாடி எஸ். சி.சக்கரவர்த்தி, மாதேஸ்வரன் அயோத்தியாப்பட்டணம் விஜயகுமார் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் அறிவாலத்தில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com