நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நான்குனேரி அருகே விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி, 3 பேர் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே வியாழக்கிழமை அதிகாலை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  புதிய தலைமுறை  தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். 

News image

விபத்தில் பலியான புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்

Updated On :24 ஆகஸ்ட் 2023, 10:20 am

DIN

களக்காடு:  திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே வியாழக்கிழமை அதிகாலை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். 

சந்திரன்- 3 வெற்றிகரமாக நிலவில் இறங்கியது தொடர்பான செய்தி வெளியிடுவதற்காக விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்திப்பதற்காக திருநெல்வேலியிலிருந்து செய்தியாளர் குழு ஒன்று புதன்கிழமை மாலை ஒரு காரில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றது. அங்கு செய்தியாளர் சந்திப்பு முடிவடைந்ததும் அக்குழுவினர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நூற்பாலை அருகே கார் வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Story image

நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நூற்பாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கர் (32) என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன் (45), நியூஸ் 7 தமிழ் ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் (38) மற்றொரு ஒளிப்பதிவாளர் நாராயணன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

Story image

திருநெல்வேலியைச் சேர்ந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்.

இதையடுத்து மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நான்குனேரி போலீசார் விபத்தில் சிக்கி பலியான சங்கரின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான சங்கருக்கு மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.