ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி: உடல் கூறாய்வு செய்ய மருத்துவக் குழு அமைப்பு!

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை உடல் கூறாய்வு செய்ய 20 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 
ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி: உடல் கூறாய்வு செய்ய மருத்துவக் குழு அமைப்பு!
Published on
Updated on
1 min read

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை உடல் கூறாய்வு செய்ய 20 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னௌவில் இருந்து தென் மாநிலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐஆர்சிடிசி சுற்றுலா ரயிலில் 180 பயணிகள் கடந்த 17 ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு சனிக்கிழமை அதிகாலை 5.15 மணி அளவில் மதுரை வந்தடைந்தனர்.

இவர்கள் வந்த சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் மதுரை போடி வழித்தடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ரயிலில் இருந்த பயணிகளில் சிலர் டீ, சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்க முயன்ற போது அந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தீ விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை உடல் கூறாய்வு செய்வதற்காக, தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் சந்திரசேகரன், சதாசிவம் தலைமையில் 20 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் ரயில்வே காவல்துறை ஈடுபட்டுள்ளது. 

பயண பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com