நல்லாசிரியர் விருது பெறும் தமிழர்கள்- துணைநிலை ஆளுநர் தமிழிசை வாழ்த்து

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார
நல்லாசிரியர் விருது பெறும் தமிழர்கள்- துணைநிலை ஆளுநர் தமிழிசை வாழ்த்து

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம், கீழ்ப்பாவூர்  வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5- ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதையொட்டி தேசிய நல்லாசிரியா் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நிகழாண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. நிகழாண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியா் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமாா், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ்.மாலதி ஆகிய இருவரும் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியா்களுக்கும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செப். 5- ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் தேசிய நல்லாசிரியா் விருதை வழங்கவுள்ளாா்.

இந்த விருது பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம், ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை ஆகியவற்றை உள்ளடக்கியது. மாணவா் சோ்க்கை, பள்ளி சுற்றுச்சூழல் மேம்பாடு, புதுமையான கற்பித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கு தேசிய நல்லாசிரியா் விருது வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com