நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சமையல் எரிவாயு விலை குறைப்பு - தேர்தலுக்கான அறிகுறி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமையல் எரிவாயு விலை குறைப்பானது தேர்தலுக்கான அறிகுறி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2023, 8:04 pm IST

சமையல் எரிவாயு விலை குறைப்பானது தேர்தலுக்கான அறிகுறி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, 5 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் மற்றும் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் ஆகிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இந்தியா கூட்டணி 28 கட்சிகளுடன் உயர்ந்திருக்கிறது. அதை எப்படி
பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

கேஸ் விலை குறைப்பு, இந்தியா கூட்டணிக்கான நெருக்கடியா? என்ற கேள்விக்கு, இல்லை, இல்லை, அது தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி என்றும், பெட்ரோல், டீசல் விலை கூட குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ஆச்சரியமில்லை!  என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.