தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மிக்ஜம் புயல்: டிச.4, 6 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணம் டிச.4, 6 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :3 டிசம்பர் 2023, 12:41 pm

DIN

மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணம் டிச.4, 6 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌, அறிவிக்கை எண்‌ 34/2022 ல்‌ அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர்‌ பணிக்கான, நேர்முகத்‌ தேர்வினை கடந்த 22.11.2023 முதல்‌ நடத்தி வருகிறது. நேர்முகத்‌ தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள்‌ (04.12.2023 முப & பிப மற்றும்‌ 06.12.2023 மு.ப) உள்ள நிலையில்‌, தமிழக அரசு, மிக்ஜம் புயல்‌ காரணமாக வருதிற திங்க்டகிழமையான (04.12.2023) சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சி‌புரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு ஆய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளதைத்‌ தொடர்ந்து நேர்முகத்தேர்வு நாளில்‌ கீழ்கண்ட மாற்றங்கள்‌ செய்யப்பட்டுள்ளன.  

வரும்‌ திங்கள்‌கிழமை (04.12.2023) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத்‌ தொடர்ந்து திங்கள்‌கிழமை (04.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும்‌ 06.12.2023 புதன்‌ கிழமைக்கும், புதன்‌கிழமை (06.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும்‌ வியாழக்‌கழமை (07.12.2023) அன்றும்‌ மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

எனவே திங்கள்‌கிழமை (04.12.2023) அன்று நேர்முகத்தேர்வில்‌ கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள்‌ அனைவரும்‌ வரும்‌ புதன்‌ கிழமை (06.12.2023). அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும்‌ புதன்‌கிழமை (06.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில்‌ கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள்‌ அனைவரும்‌ வியாழக்‌கிழமை (07.12.2023) அன்றும்‌ மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில்‌ தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவறார்கள்‌” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.