வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (டிச. 5) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று(டிச.4) காலை 8.30 மணி வரை அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் ’சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(டிச.4) காலை 8.30 மணி வரை, பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் இடி மின்னல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணாநகர், மடிப்பாக்கம், பெரம்பூர், தி.நகர், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் நகரின் பிற பகுதிகளிலும், இன்று (டிச.4) அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


