சென்னையில் 8 ஆவின் மையங்களில் 24 மணி நேரமும் விற்பனை!- அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் 8 ஆவின் மையங்களில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் 8 ஆவின் மையங்களில் வரும் சில நாட்களுக்கு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயலால் கடந்த ஒரு சில தினங்களாக பால் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருகிறது.

இந்நிலையில், பால் தட்டுப்பாட்டைப் போக்க, சென்னையில் அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், பெசன்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய 8 ஆவின் மையங்களில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆவின் வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய கீழ்கண்ட ஆவின் பார்லர்கள் இன்று முதல் தேவைக்கேற்ப (சில நாட்கள்)24 மணி நேரமும் செயல்படும். ஆவின் பால், பால் பவுடர் மற்றும் பால் உப பொருள்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com