4 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி நிதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. 
4 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி நிதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மிக்ஜம் புயலால் இந்த 4 மாவட்டங்களில் அரசுப்பள்ளிகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்கவும் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்டத்திற்கு தலா ரூ. 25 லட்சம் வீதம் ரூ. 1 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

வருகிற திங்கள்கிழமை(டிச. 11) முதல் பள்ளிகள் செயல்பட உள்ள நிலையில் பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள், சேதமடைந்தவற்றை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com