
நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, உதகை மலை ரயில் சேவை மேலும் இரு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் கடந்த நவ. 22 ஆம் தேதி முதல் உதகை-குன்னூா் இடையேயான மலை ரயில் சேவை கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது.
சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், நேற்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக ரத்தானது.
இதையடுத்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு கருதி மேலும் இரு நாள்களுக்கு (டிச. 9, 10) உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.