தஞ்சையில் வாஷிங்மெஷின் வெடித்து விபத்து

தஞ்சாவூரில் வீட்டில் இருந்த வாஷிங் மெஷின் சனிக்கிழமை காலை திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூரில் வீட்டில் இருந்த வாஷிங் மெஷின் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்.
தஞ்சாவூரில் வீட்டில் இருந்த வாஷிங் மெஷின் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வீட்டில் இருந்த வாஷிங் மெஷின் சனிக்கிழமை காலை திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர் கீழவாசல் கவாஸ்கார தெருவைச் சேர்ந்தவர் சிவகிரிநாதன்.இவர் வழக்கம்போல சனிக்கிழமை காலை துணி துவைப்பதற்காக வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டு இயக்கியுள்ளார்.அப்போது வாஷிங் மெஷின் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து எரிந்தது.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த வேறு எந்த பொருட்களும் எரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com